கருவில் இருந்த குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை - அசத்திய டாக்டர்கள்
உலகில் முதல் முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
வீனஸ் ஆப் கேலன்
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தார். 34 வாரங்கள் ஆன நிலையில் அந்த பெண் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
அதில், குழந்தையின் மூளையில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது தெரிய வந்தது. இந்த குறைபாடு வீனஸ் ஆப் கேலன் என அறியப்படுகிறது.
கருவில் ஆபரேஷன்
நரம்புகளுக்குள் அதிக ரத்த அழுத்தத்தை உருவாக்கும். இதயம் செயல் இழப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயமும் உள்ளது. இதனை ஆபரேஷன் மூலம் சரிசெய்ய டேரன் ஆர்பாக் தலைமையிலான டாக்டர் குழுவினர் முடிவு செய்தனர்.
எனவே, குழந்தையை கருவிலேயே காப்பாற்ற டாக்டர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து தற்போது அந்த குழந்தையின் ரத்த நாளம் சரி செய்யப்பட்டதால் உயிருக்கு இனி ஆபத்து இல்லை என தெரிவித்துள்ளனர்.
உலகில் முதல் முறையாக இந்த அறுவை சிகிச்சையை அமெரிக்க டாக்டர் குழுவினர் செய்து சாதனை படைத்துள்ளனர்.