33 மணி நேர அறுவை சிகிச்சை .. தலை ஒட்டி பிறந்த குழந்தைகளை பிரித்து மருத்துவர்கள் சாதனை
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெர்னார்டோ மற்றும் ஆர்தர் லிமா என்ற இரண்டு சிறுவர்கள், தலைப்பகுதியில் மூளைப்பகுதி ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகளாக பிறந்தனர்.
அவர்களின் மூளை பொதுவாக தனித்தனியாக இருக்கும், ஆனால் அவர்களின் தலை ஒட்டியே இருக்கும் இதற்கு 'கிரேனிஓபேகஸ் இரட்டைப்பிறவிகள்' என்று பெயர்.
மூளை ஒட்டிப் பிறந்த சகோதரர்களுக்கு, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் தலைமையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
4 வயதான அந்த இரு சகோதரர்களுக்கும், இதுவரை ஏழு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் நூர் ஜீலானியின் மருத்துவ ஆலோசனைப்படி, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கடைசியாக செய்யப்பட்ட இரண்டு அறுவை சிகிச்சைகளும். 33 மணி நேரம் நீடித்தது. அந்த இரு சிறுவர்களுக்கும் பிறக்கும்போதே மூளை கிட்டத்தட்ட இணைக்கப்பட்டு பிறந்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சைக்காக கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் உதவி புரிந்து இருக்கின்றனர். சிறுவர்களுக்கு செய்யப்பட வேண்டிய இந்த பிரத்தியேக அறுவை சிகிச்சைக்காக பல மாதங்கள் பயிற்சிகளை தனியாக மேற்கொண்டு அதன்பின் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
அந்த இரு சிறுவர்களின் பெற்றோரும் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலில் உள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போதிலிருந்து இன்று வரை அவர்கள் மருத்துவமனையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டனர் என ஒரு மருத்துவர் தெரிவித்தார்.
இந்த அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட நிதியுதவியை தொண்டு நிறுவனம் மூலம் மருத்துவர் ஜீலானி ஏற்பாடு செய்து கொடுத்தார். இது மிகவும் கஷ்டமான ஒரு அறுவை சிகிச்சையாக இருந்தது என்று மருத்துவர்கள் கூறினர்.
இது சாத்தியமாகும் என்று பல மருத்துவர்கள் நினைக்கவில்லை. ஆனால் இப்போது வெற்றிகரமாக நடந்து விட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். உலகில் பிறக்கும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இத்தகைய குறைபாடு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இருவர் சிறுவர்களும் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் இருவருக்கும் ஆறு மாத காலம் மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.