லாஸ் ஏஞ்சல்சில் கிடுகிடுவென ஆடிய கட்டிடங்கள்.. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் மதியம் 12.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அமெரிக்கா - மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள சான் டியோகா பகுதி முழுவதும் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுகத்தால் கட்டிடங்கள் குலுங்கின ஆனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை . சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என அமெரிக்காவின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம்
மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட நில நடுக்கம் ஏற்பட்டபோது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு கலிபோர்னியாவில் மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மட்டும் 277-க்கும் மேற்பட்ட அதிர்வுகள் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.