இந்தியாவை சோதித்த மைதானம் - ரூ.250 கோடி செலவு திடீர் இடிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி!!

India New York T20 World Cup 2024
By Karthick Jun 14, 2024 11:12 AM GMT
Report


நியூயார்க் கிரௌண்ட்டில் தான் இந்தியா தனது 3 உலகக்கோப்பை டி20 ஆட்டங்களிலும் விளையாடி இருந்தது.

உலகக்கோப்பை

நடைபெற்று உலகக்கோப்பை பல ஆச்சரியங்களை மக்களுக்கு கொடுத்து வருகின்றது. பெரிய அணிகள் தற்போதே வெளியேறிவிட்டன. ஆப்கனிஸ்தான் நியூசிலாந்தை தோற்கடித்தது, அமெரிக்கா பாகிஸ்தானை வீழ்த்தியது என பல அதிர்ச்சிகள் நடந்தது.

world cup t20 newyork ground

அதே போல, இந்தியா அணி விளையாடிய போட்டிகளிலும் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தொடர்ந்து தடுமாறியது இந்தியா. 3 போட்டிகளில் விளையாடிய இந்தியா 3'லும் வெற்றி பெற்றது. ஆனால், பெரிய ஸ்கோர் அதிகவில்லை. ஏனென்றால் மைதானத்தின் தன்மை அப்படி இருந்தது.

இடிப்பு

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் தான், அமெரிக்காவில் உலகக்கோப்பை தொடர் நடத்தப்பட்டது. அதிக மைதானங்கள் இல்லாத காரணத்தால், தற்காலிக மைதானம் ஒன்று நியூயார்க் புறநகரில் இரண்டே மாதத்தில் கட்டப்பட்டது.

என்னதான் நடக்குது - அணியில் 6 கருப்பு ஆடுகள் உள்ளது..காரணம் இவர் தான்!! திணறும் அணி நிர்வாகம்

என்னதான் நடக்குது - அணியில் 6 கருப்பு ஆடுகள் உள்ளது..காரணம் இவர் தான்!! திணறும் அணி நிர்வாகம்

செயற்கை ஆடுகளமான இதில், 8 போட்டிகளும் நடத்தப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், சில பந்துகள் தாறுமாறாக வந்தது. இந்த நிலையில் தான், பௌலர்களுக்கு மட்டுமே ஆதரவாக இருந்த இந்த மைதானத்தை தற்போது இடிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.

world cup t20 newyork ground

இந்த மைதானத்தில் திட்டமிடப்பட்ட அனைத்து போட்டிகளும் முடிந்து விட்டதால், சுமார் 250 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட மைதானத்தை தற்போது பிரித்து வருகிறார்கள்.