என்னதான் நடக்குது - அணியில் 6 கருப்பு ஆடுகள் உள்ளது..காரணம் இவர் தான்!! திணறும் அணி நிர்வாகம்
பாகிஸ்தான் அணி நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் அடுத்த சுற்றிற்கு தகுதி பெறுவோமா? என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தவிக்கும் பாகிஸ்தான்
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அதிர்ச்சியளிக்கும் வகையில் அமெரிக்கா அணியிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. அதனை தொடர்ந்து இந்திய அணியிடமும் அடி வாங்கியது. கனடா அணிக்கு எதிராக மட்டுமே பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணி குறித்து முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
கேப்டன் பாபர் அசாமின் ஆதிக்கம் அணியின் தேர்வில் இருப்பதால் தான், அணி சொதப்புவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதாவது தன்னுடைய நண்பர்கள் 6 பேரை அணியில் எப்போதும் சேர்த்து வருகிறார் பாபர் என குற்றச்சாட்டு உள்ளது.
மாற்றம்
அந்த பட்டியலில் ஷதாப் கான், ஹாரிஸ் ரௌஃப் போன்ற வீரர்களின் பெயரும் அடங்கும். தொடர்ந்து பாகிஸ்தான் அணி தடுமாறி வரும் காரணத்தால் அணியில் மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்வி பேசும் போது, முதலில் பாகிஸ்தான் அணியில் சிறிய அளவில் மாற்றங்கள் தான் செய்ய வேண்டும் என இருந்தோம். ஆனால், இந்தியாவிற்கு எதிராக மிகவும் மோசமாக செயல்பட்டதை அடுத்து அணியில் அதிரடியாக பெரிய மாற்றங்கள் தேவைப்படுகிறது.
அணியின் செயல்பாடும் போட்டிகளில் வெகுவாக குறைந்துள்ளது. அந்த அணியின் செயல்பாட்டை முன்னேற்றுவதே தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.