கப்பே ஜெயிச்சாலும் சூர்யகுமார் நீக்கம் உறுதி - பிசிசிஐ அதிரடி முடிவு!
டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மாற்றப்படுவது உறுதியாகியுள்ளது.
டி20 அணி
டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மாற்றப்படுவது உறுதி எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பின் சுப்மன் கில் டி20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஜித் அகர்கர், "ரோஹித் சர்மா ஒரு வெற்றிகரமான கேப்டன். அவரை மாற்றுவது கடினமான முடிவுதான்.
கேப்டன் யார்?
ஆனால், சில சமயங்களில் நாம் அணியின் எதிர்காலத்தையும், நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். அடுத்த உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன.
அதற்குள் புதிய கேப்டனுக்குப் போதுமான அவகாசம் கொடுக்க வேண்டும். மூன்று வடிவங்களுக்கும் மூன்று வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பது, பயிற்சியாளருக்கும் மிகவும் கடினமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.