ஐபிஎல்லில் மும்பை அணிக்கு ஆடுறதா நினைச்சியா? திலக் வர்மாவை சீண்டிய பாகிஸ்தான்!
திலக் வர்மாவை பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் வம்பிழுத்துள்ளார்.
அசத்திய திலக் வர்மா
ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதில், திலக் வர்மா 53 பந்துகளில் 69 ரன்கள் விளாசியது இந்திய ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இந்நிலையில், திலக் வர்மாவின் கவனத்தை சிதறடிக்க பாகிஸ்தான் அணியின் வீரர்கள் களத்தில் முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் பேசுகையில், நான் எப்போதும் சொல்வதை போல், இந்திய அணிக்காக போட்டிகளை வெல்ல வேண்டும்.
எனது பேட்டிங்கில் அடிப்படை விதிகளை மட்டுமே பின்பற்றினேன். பேட்டிங்கின் போது ஒரு வார்த்தை கூட பாகிஸ்தான் பவுலர்களை பற்றி பேசவில்லை. ஆனால் பாகிஸ்தான் பவுலர்கள் என்னை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தார்கள்.
வம்பிழுத்த முகமது
பேட்ஸ்மேன்களுக்கும், பவுலர்களுக்கும் இடையில் எப்போதும் அது நடந்து கொண்டேதான் இருக்கும். அதனால் அனைத்தையும் வெளியில் சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்கு ரியல் பதிலடி, பேட்டிங்கின் மூலமாக வெற்றி பெறுவது தான்.
எப்போது நாட்டிற்காக ஆடுவது தான் முக்கியம். அதற்கான என் உயிரையும் கொடுக்க தயார். அதனை சிறுவயது முதலே மனதில் வைத்துள்ளேன் என்று தெரிவித்தார். இதற்கிடையில், திலக் வர்மாவின் பேட்டிங்கின் போது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ்,
இது ஒன்றும் ஐபிஎல் தொடரும் அல்ல. நீ ஒன்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடவில்லை என்று வம்பிழுத்தது குறிப்பிடத்தக்கது.