என்னை நானே ஒப்படைத்து உழைக்கிறேன் - முதல்வர் முக ஸ்டாலின்
ஆதிதிராவிடர் நலனில் என்னை நானே அர்ப்பணித்து உழைத்து வருகிறேன் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
அடிக்கல் நாட்டினர்
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.32.95 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், விடுதிகள் மற்றும் சமுதாயநலக்கூடத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், ரூ. 138 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள விடுதிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் அறைகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய அவர், ஆதிதிராவிடர் நலனில் என்னை நானே அர்ப்பணித்து உழைத்து வருகிறேன் என தெரிவித்தார்.
அண்ணல் அம்பேத்கர் கட்டிய வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், எல்லாருக்கும் எல்லாம் என்று நோக்கில் திட்டங்கள் எடுக்கப்படுவ வருவதாக தெரிவித்தார்.
சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம்
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை உயர்த்திட தனி கவனம் செலுத்துவதாக கூறிய அவர், அமைச்சர் கயல்விழி செல்வராஜிற்கு அவரின் பணிக்காக பாராட்டுகளை தெரிவித்தார்.
தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசால் பழங்குடியின மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் முக ஸ்டாலின் சமூகநிலைகளில் அவர்களின் வாழ்வை உயர்த்த அரசு தொடர்ந்து செய்து வருவதாக கூறினார்.
சமூக - சிந்தனை வளர்ச்சியின் மக்களின் மனங்களில் வளர வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்,மானுட நெறிகளின்படி தமிழ்நாட்டை உருவாக்க அம்பேத்கரின் கனவான சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை நோக்கிய பயணத்தை நாம் தொடருவோம் என்று பேசி நிறைவு பெற்றார்.