நெல்லை, தூத்துக்குடிக்கு ரூ.6000; டோக்கன் எப்போது - ஆனால் இதை கவனிங்க..
வெள்ளப் பாதிப்பால் நிவாரணத் தொகைக்கான டோக்கன் வழங்கப்படுகிறது.
வெள்ளப் பாதிப்பு
தென் மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழை தூத்துக்குடியில் இயல்பை விட 68%மும், திருநெல்வேலியில் 135%மும், கன்னியாகுமரியில் 103%மும், தென்காசியில் 80%மும் கூடுதலாக பதிவாகியுள்ளது.
அதனால், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கின. அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
டேக்கன் வழங்கும் பணி
இதற்காக ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழ்நாடு அரசு புதிய திருப்பமாக வங்கியில் போடாமல்.. ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் என்று அறிவித்து டோக்கன் வழங்கி வருகிறது.
அதிக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை, பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன, எனவே ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.