அடக்கடவுளே..பள்ளி மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட working days!! இனி சனிக்கிழமையையும் லீவு இல்லையா??
நாளை தமிழகத்தில் மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன.
கோடை விடுமுறை
ஆண்டு தேர்வுகள் முடிந்த நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளும் வெளியாகி, காலேஜ் சேர்ப்பு, அடுத்த வகுப்பு சேர்ப்பு போன்ற பணிகள் மும்முரமாக நடைபெற்றன.
முன்னர் பள்ளிகள் ஜூன் 6-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால், நாளை அதாவது ஜூன் 10-ஆம் தேதி தான் திறக்கப்படும் என மாற்று தேதி அறிவிக்கப்பட்டது.
நாள்காட்டி
நாளை பள்ளிகள் திறக்கப்படும் சூழலில், பள்ளிகளுக்கான நாள்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளின் வேலை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், தேர்வு காலங்கள் போன்ற விவரங்கள் இதில் அடங்கியுள்ளன.
அதன்படி, 2024-25ஆம் கல்வி ஆண்டில் மொத்த வேலை நாள் 210லிருந்து 220ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கம் போல சனி, ஞாயிறுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல, அரையாண்டு தேர்வுகள் செப்டம்பர் 20 முதல் 27 வரையிலும், அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 16 முதல் 23 வரையிலும் நடைபெறவுள்ளன.