மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - தள்ளிப்போன பள்ளிகள் திறப்பு!! எப்போ தெரியுமா?
தமிழகத்தில் வரும் ஜூன் 6-ஆம் தேதி கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
கோடை விடுமுறை
ஆண்டு தேர்வுகள் முடிந்த நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளும் வெளியாகி, காலேஜ் சேர்ப்பு, அடுத்த வகுப்பு சேர்ப்பு போன்ற பணிகள் தீவிரமடைந்துள்ளன.
அண்மையில் அறிவிப்பை வெளியிட்ட தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சகம் கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகளின் திறப்பு ஜூன் 6-ஆம் தேதி இருக்கும் என அதிகாரபூர்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்டி வதைக்கும் வெயில்
அக்னி நட்சத்திர வெயில் முடிவடைந்த நிலையலும் தமிழகத்தின் பல இடங்களிலும் வெயிலின் தாக்கம் குறைந்த பாடில்லை. மாநிலத்தின் பல இடங்களில் 100 டிகிரி வெயிலை தாண்டி வெப்பம் சுற்றெறித்து வருகின்றது.
இதன் காரணமாக, தற்போது பள்ளிகளின் திறப்பை தள்ளிவைக்கவேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.
தள்ளிபோகிறதா.?
பாமகவை சேர்ந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் என பலரும் கோரிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு வைத்து வருகிறார்கள்.
ஏற்கனவே வெப்ப அலையின் காரணமாக, நேற்று பீகாரில் பள்ளியில் இருந்த மாணவர்கள் அடுத்தடுத்த மயங்கி விழுந்து அழத காட்சிகள் இணையத்தை கலங்கடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் ஜூன் 10-ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கும் என பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.