தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு?? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

Anbil Mahesh Poyyamozhi School Incident
By Karthick Apr 25, 2024 07:14 AM GMT
Report

ஆண்டு தேர்வுகள் முடிந்து பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முடிந்த தேர்வுகள்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆண்டு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், மாணவர்கள் விடுமுறையை கொண்டாடி வருகிறார்கள். 1- ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் 6ம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது.

PM Shri பள்ளிகள் ஒப்பந்தம் மட்டும் தான் - தேசிய கல்வி கொள்கையை ஏற்கமாட்டோம் - அன்பில் மகேஷ்

PM Shri பள்ளிகள் ஒப்பந்தம் மட்டும் தான் - தேசிய கல்வி கொள்கையை ஏற்கமாட்டோம் - அன்பில் மகேஷ்

ரமலான் விடுமுறையில் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், 4 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு 22, 23 ஆம் தேதிகளில் இருந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து எப்போது பள்ளிகள் திறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

school-opening-postponed-anbil-magesh-meeting

நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பல அரசு பள்ளிகளில் தான் வாக்கு பேட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி தான் எண்ணப்படும் என்பதால் அது வரை பள்ளிகள் இயங்காது. ஆனால், அதனை தொடர்ந்து எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்ற ஆலோசனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

school-opening-postponed-anbil-magesh-meeting

அதே நேரத்தில் கடந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிபோகுமா..? என்ற கேவலியும்கேள்வியும் எழுந்துள்ளது