PM Shri பள்ளிகள் ஒப்பந்தம் மட்டும் தான் - தேசிய கல்வி கொள்கையை ஏற்கமாட்டோம் - அன்பில் மகேஷ்
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு எப்போதும் ஏற்காது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
PM Shri பள்ளிகள்
PM Shri பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க தமிழக அரசு மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளதாகவும் இந்த பள்ளிகளை தமிழ்கத்தில் திறக்க அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதற்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்ற்றுள்ளார்.
எதிர்க்கக் கூடியவர்கள் தான்
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர் என்பதை தாண்டி ஒரு திமுககாரனாக புதிய கல்வி சட்டத்தை எதிர்க்கக் கூடியவர்கள் தான் தாங்கள் என உறுதிபட தெரிவித்தார்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முதல்வரின் ஆலோசனைப்படி இருக்கும் என குறிப்பிட்டு, அண்மையில் மத்திய அமைச்சரை சந்த்தித்த போது கூட கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்ததாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
மத்திய அரசின் PM Shri பள்ளிகள் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளோம் என விளக்கமளித்து, குழு அமைத்து அதில் நம்முடைய மாநிலத்திற்கு என்ன தேவையோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு கல்வி திட்டம் உருவாக்கி உள்ளோம் என்று கூறி சென்றார்.