பிக் பாஸ் செட்டில் ஏற்பட்ட விபத்து..தவறி விழுந்த தொழிலாளர் - என்ன நடந்தது?

Tamil nadu Bigg Boss Accident
By Swetha Sep 26, 2024 08:30 AM GMT
Report

தவறி விழுந்து வடமாநில தொழிலாளி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் செட்

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் தனியார் பிலிம் சிட்டி ஒன்று அமைந்துள்ளது. அங்கு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான செட் அமைத்து படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கம்.

பிக் பாஸ் செட்டில் ஏற்பட்ட விபத்து..தவறி விழுந்த தொழிலாளர் - என்ன நடந்தது? | Worker Fell From 20 Ft Height Big Boss Set Injured

அந்த வகையில், தனியார் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு இங்கு பிரம்மாண்ட வீடு செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில், ‘பிக் பாஸ்’ 8-வது சீசன் இன்னுன் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில்,

கலவரமாகப்போகும் பிக் பாஸ் வீடு....களமிறங்கும் ரேகா நாயர் - பயில்வான்

கலவரமாகப்போகும் பிக் பாஸ் வீடு....களமிறங்கும் ரேகா நாயர் - பயில்வான்

விபத்து..

அந்த வீட்டின் உட்பகுதியில் சில பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியின்போது, சாயின் கான்( 47) உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள்சாயின் கான், எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி உயரத்தில் இருந்து, தவறி கீழே விழுந்தார்.

பிக் பாஸ் செட்டில் ஏற்பட்ட விபத்து..தவறி விழுந்த தொழிலாளர் - என்ன நடந்தது? | Worker Fell From 20 Ft Height Big Boss Set Injured

இதில், பலத்த காயமடைந்த சாயின் கானை, சக தொழிலாளர்கள் மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, நசரத்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.