கலவரமாகப்போகும் பிக் பாஸ் வீடு....களமிறங்கும் ரேகா நாயர் - பயில்வான்

Kamal Haasan Bigg Boss Bayilvan Ranganathan Rekha Nair
By Karthick Aug 24, 2023 09:05 AM GMT
Report

பொதுவெளியில் சண்டையிட்டு கொண்டிருந்த நடிகை ரேகா நாயர் மற்றும் நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் இருவரும் துவங்கவுள்ள பிக் பாஸ் நிகழிச்சியில் கலந்துக்கொள்ள போகிறார்கள் என்ற செய்து வெளிவந்துள்ளன.

பிக் பஸ் நிகழ்ச்சி  

நடிகர் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சண்டை சச்சரவு தான் ரசிகர்களை பெருமளவில் இந்நிகழ்ச்சியினை காண ஈர்த்து வருகிறது.

rekha-nair-and-bayilvan-in-biggboss-7

இந்நிகழ்ச்சியின் 6 சீசன்களை முடிவடைந்துள்ள நிலையில், தற்போது விரைவில் 7-வது சீசன் துவங்கப்படவுள்ளது. இதில் யார் யார் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் போன்ற செய்திகள் அதிகளவில் வெளியாகி வருகின்றன.

பயில்வான் - ரேகா நாயர்   

இதில் தற்போது நடிகை ரேகா நாயர் மற்றும் நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு அமைந்தால் இந்த சீசனின் முக்கிய ஈர்ப்பு இவர்கள் இருவரும் தான்.

rekha-nair-and-bayilvan-in-biggboss-7

ரேகா நாயர் நடிப்பில் வெளியான இரவின் நிழல் படம் தொடர்பாக ரேகா நாயருக்கும், பயில்வான் ரங்கநாதனும் பெசண்ட் நகர் பீச்சில் ஏற்பட்ட சண்டையை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதனை தொடர்ந்து இருவரும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அதன் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகளவில் இருக்கும்.