பெண்களுக்கு மகிழ்ச்சி - விரைவில் மாதவிடாய் நாட்களில் WORK FROM HOME!
மாதவிடாய் நாள்களில் பெண்கள் விட்டில் இருந்தே பணிபுரியும் திட்டத்தை அமல்படுத்த சமூக நலவாரியம் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.
மாதவிடாய்
ராஜஸ்தான் மாநிலம் சமூக நலவாரியம் வாரியத்தின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு வீட்டில் இருந்தே பணிபுரியும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அம்மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சமூகநல வாரியத்தின் தலைவர் அர்ச்சனா சர்மா கூறுகையில், பெண்கள் மாதவிடாய் காலங்களில் உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
WORK FROM HOME
இதனால் மாதவிடாய் களங்களில் வீட்டில் இருந்து பணிப்புரிய விதிகளை உருவாக்க மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளை கருத்தில் கொண்டு அணைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் குட் டச், பேட் டச்(Good touch - Bad touch) பற்றிய பயிலரங்கை நடத்த வாரியத்தின் மூலம் முடிவு எடுக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .