ஒரு சாக்லேட்டின் விலை 1 கோடியாம் - அதில் அப்படியென்ன இருக்கு?
ஒரு கோடி ரூபாய்க்கு சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது.
காஸ்ட்லி சாக்லெட்
பென்சில்வேனியா மாநிலத்தில், பிட்ஸ்பர்க்கில் SARRIS CHOCOLATE என்ற தொழிற்சாலை மிகவும் பிரலம். இங்கு சாக்லேட்டுடன் விதவிதமான ஐஸ்கிரீம்கள் தயாராகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும், சோப்பு, சீப்பு, செருப்பு போன்ற பொருட்களின் உருவங்களிலேயே சாக்லேட்கள் தயார் செய்து காட்சிப்படுத்துகின்றனர்.
இவ்வளவு விலையா?
இந்நிலையில், 1,180 கிலோவில், 12 அடி உயரம், 8 அடி நீளம்,3 அடி அகலம் கொண்ட சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. 3 மாதமாக, 8 பேர் கொண்ட குழு இந்த சாக்லேட்டை தயாரித்துள்ளது.
இதன் விலை ஒரு லட்சத்து முப்பதாயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் 1 கோடிக்கும் மேல்) அதனை பார்ப்பதற்காகவே, ஏராளமானோர் சாக்லேட் தொழிற்சாலைகளுக்கு திரண்டு வருகின்றனர்.
ஆனால் இவ்வளவு காஸ்ட்லி சாக்லெட்டை வாங்கி செல்ல போட்டுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.