கோலாகலமாக நடந்த திருமண ஏற்பாடுகள்! நள்ளிரவில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்

wedding wonderful midnight
By Jon Mar 08, 2021 06:45 PM GMT
Report

திருமணம் செய்ய விருப்பம் இல்லாததால், இளம்பெண் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு ஜெயநகர் 4-வது தெருவைச் சேர்ந்த தம்பதியினர் சண்முகம்- கல்யாணி, இவரது மகள் பரிமளா (வயது 24), தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சண்முகம் இறந்துவிட்டார், இதனால் கல்யாணி குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பரிமளாவுக்கு திருமண வயது நெருங்கியதால், மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்துள்ளனர். அடுத்த மாதம் திருமணத்திற்கான தேதியும் குறிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதற்கிடையே தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என பரிமளா கூறிவந்துள்ளார், ஆனால் இதை அவரது குடும்பத்தினர் காதில் வாங்கிக் கொள்ளாமல் திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.

இதனால் மேலும் விரக்தியடைந்த பரிமளா நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார். அவரை, குடும்பத்தினர் மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிமளாவை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் கல்யாணி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.