3 அந்தரங்க உறுப்புகளுடன் பிறந்த அதிசய குழந்தை

baby wonder iraq genitals
By Jon Apr 03, 2021 12:37 PM GMT
Report

ஈராக்கில் மூன்று அந்தரங்க உறுப்புகளுடன் குழந்தை பிறந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள மொசூல் அருகே இக்குழந்தை பிறந்ததும், மருத்துவர்கள் அதிசயம் கலந்த அதிர்ச்சியுடன் பார்துள்ளனர். உலகின் மிக அரிதான நிகழ்வாக மூன்று அந்தரங்க உறுப்புகளுடன் குழந்தை பிறந்ததை தாங்கள் பார்த்ததாக தெரிவிக்கின்றனர்.

குழந்தையின் ஆண்குறியுடன், மேலும் இரு ஆண் குறிகள் இணைந்திருந்தன. அதில் ஒன்று 2 செ.மீ நீளமும், மற்றொன்று 1 செ.மீ. நீளத்திலும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குழந்தையை முழுமையாக பரிசோதித்த பின்னர், அந்த உறுப்புகள் சேதமில்லை என தெளிவாக தெரிந்ததும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருததுவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

கர்ப்ப காலத்தில் அக்குழந்தையின் அம்மாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை அல்லது மரபணு ரீதியாக ஏற்பட்ட பிரச்சனையால் இவ்வாறு நடந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர். இக்குறைபாட்டை Supernumerary penises occur என மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

   

Gallery