கட்சிக்காரர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை; அதைத்தான் குஷ்பு கேட்டாங்க - விஜயதரணி குற்றசாட்டு!

BJP Governor of Tamil Nadu Kushboo
By Swetha Mar 14, 2024 04:08 AM GMT
Report

மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பாரபட்சம் நிலவுகிறது என முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.

உரிமைத் தொகை திட்டம்

தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து பா.ஜ.க. தேசிய மகளிரணி ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு பேசிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கட்சிக்காரர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை; அதைத்தான் குஷ்பு கேட்டாங்க - விஜயதரணி குற்றசாட்டு! | Womens Rights Amount Not Available Vijayatharani

இந்நிலையால், இது தொடர்பாக அண்மையில் பாஜக வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை நான் வரவேற்கிறேன்.

இந்தியாவில் அதிகம் கார் திருட்டு நடக்கும் நகரம் இதுவா? சென்னையின் நிலைமை தெரிஞ்சா ஷாக் ஆய்டுவிங்க!

இந்தியாவில் அதிகம் கார் திருட்டு நடக்கும் நகரம் இதுவா? சென்னையின் நிலைமை தெரிஞ்சா ஷாக் ஆய்டுவிங்க!

 விஜயதரணி குற்றசாட்டு

எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். அதே சமயம், தாலிக்கு தங்கம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார் என்பதற்காகவே அதை நிராகரிக்கிறார்கள்.

கட்சிக்காரர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை; அதைத்தான் குஷ்பு கேட்டாங்க - விஜயதரணி குற்றசாட்டு! | Womens Rights Amount Not Available Vijayatharani

மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திலும் பாரபட்சம் நிலவுகிறது. கட்சிக்காரர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்படுவதாக சில இடங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகையை வழங்குவோம் என தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியிருந்தது. ஆனால் அது அனைவருக்கும் கிடைக்கவில்லை. அதைத்தான் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.