இந்தியாவில் அதிகம் கார் திருட்டு நடக்கும் நகரம் இதுவா? சென்னையின் நிலைமை தெரிஞ்சா ஷாக் ஆய்டுவிங்க!
இந்தியாவில் கார்களை அதிகம் திருடும் நகரங்களை குறித்து இந்த பதிவில் காணலாம்.
கார் திருட்டு
இந்தியாவில் கார்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதேபோல அதனை திருடும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்க தான் செய்கிறது.
கார்களின் உரிமையாளர்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், இந்த கார் திருடும் கும்பல்கள் தங்களது கைவரிசையை காட்டத்தான் செய்கிறார்கள். இந்நிலையில், அதிகளவு கார் திருட்டு நடக்கும் இந்திய நகரங்களின் பட்டியலை, அக்கோ காப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எது தெரியுமா ?
’திருட்டு மற்றும் நகரம்’ என்ற தலைப்பில் அந்த நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 6 நகரங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையியை வெளியிட்டது.
அதில்,கடந்த ஆண்டின் தரவுகள் படி டெல்லியின் பஜன்புரா மற்றும் உத்தம் நகர் ஆகிய இடங்களில் அதிகம் கார் திருட்டு நடப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக செவ்வாய், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் அதிக வாகனங்கள் திருடு போவதாக கூறுகின்றனர். மேலும் பட்டியலில் அடுத்தபடியாக அதிக வாகன திருட்டு நடைபெறும் நகரங்களில் சென்னை இரண்டாவது இடத்தையம் பெங்களூரு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் வாகன திருட்டுகள் குறைவு என்றாலும் கடந்த ஒரு சில ஆண்டுகளாக கார் திருட்டு இங்கு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.