சக்தி வாய்ந்த டாப் 100 இந்தியர்கள் பட்டியல்; மோடி முதலிடம்..அடுத்தது யார் தெரியுமா?
சக்தி வாய்ந்த டாப் 100 இந்தியர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் பாஜக, ஆர்எஸ்எஸை சேர்ந்தவர்களே இடம் பெற்றுள்ளனர்.
முதல் 5 இடத்தில்
இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த ஆண்டின் டாப் 100 சக்திவாய்ந்த இந்தியர்களின் பெயர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் மோடி இடம் பெற்றுள்ளார். ஆண்டுதோறும் அவரது மதிப்பு உயர்ந்து வருகிறது. தனது எக்ஸ் தளத்தில் 95.6 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
2வது இடத்தில் சக்தி வாய்ந்த நபராக அமித்ஷா உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்கு அமித்ஷாவின் வியூகம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அடுத்தப்படியாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்கு முக்கிய அங்கம் வகுக்கிறார்.
அடுத்தது யார்?
4வது இடத்தை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் பிடித்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் விவகாரம்,370 வது சட்டப்பிரிவு ரத்து ஆகியவற்றில் அவருக்கு முக்கியமான பங்கு உள்ளது.
அடுத்ததாக 5வது இடத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளார்.ரஷ்யாவின் எண்ணெய் தடை மற்றும் காலிஸ்தான் பிரச்சனையை அணுகிய விதம் பாராட்டுக்குரியதாகும்.
6வது இடத்தில் யோகி ஆதித்யநாத் இருக்கிறார்.பாஜகவின் முக்கிய தலைவராகவும் உத்தரபிரதேசத்தின் முதல்வராகவும் உள்ளார்.
மேலும், அடுத்தடுத்த நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர் ராஜ்நாத் சிங், தொழிலதிபர் கெளதம் அதானி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் 16வது இடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளார்.