பெண்ணின் திருமண வயது உயர்த்தப்படுகிறதா? நாடாளுமன்ற நிலைக்குழு முக்கிய ஆலோசனை!

Government Of India India Marriage
By Swetha Nov 14, 2024 06:10 AM GMT
Report

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்துகிறது.

திருமண வயது

இந்தியாவில் தற்போது ஆண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் உள்ளது. இந்த வயதிற்கு கீழ் திருமணம் செய்துகொண்டால் அது குழந்தை திருமணமாக கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .

பெண்ணின் திருமண வயது உயர்த்தப்படுகிறதா? நாடாளுமன்ற நிலைக்குழு முக்கிய ஆலோசனை! | Womens Marriage Age Is Increasing From 18 To 21

இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான திருமண வயதை 21 ஆக நிர்ணயிக்க குழந்தை திருமண தடுப்பு சட்ட மசோதா உருவாக்கப்பட உள்ளது. கடந்த 2021 ல் கொண்டு வரப்பட்ட மசோதா காலாவதியான நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசித்து வருகிறது.

பெண்கள் 9 வயதில் திருமணம் செய்யலாம் - புதிய சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

பெண்கள் 9 வயதில் திருமணம் செய்யலாம் - புதிய சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

ஆலோசனை

கடந்த 2020 ஆம் ஆண்டு சுதந்தி தின உரையின்போது பிரதமர் மோடி, ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து பெண்களை பாதுகாக்க அவர்களின் திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து திருமண வயதை மறு நிர்ணயம் செய்வதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

பெண்ணின் திருமண வயது உயர்த்தப்படுகிறதா? நாடாளுமன்ற நிலைக்குழு முக்கிய ஆலோசனை! | Womens Marriage Age Is Increasing From 18 To 21

இந்த நிலையில், வருகிற 22-ந் தேதி, பாராளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் நடக்கிறது. அதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர், இளைஞர் குரல் இயக்கத்தின் பிரதிநிதிகள்ஆகியோர் குழுவின் முன்பு ஆஜர் ஆகிறார்கள்.

அதோடு, தேசிய பெண்கள் ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட இருக்கிறது.