நிலப்பிரச்சனையில் உயிருடன் புதைக்கப்பட்ட பெண்கள் - பதைபதைக்க வைக்கும் வீடியோ

Madhya Pradesh
By Karthikraja Jul 22, 2024 09:30 AM GMT
Report

நிலப்பிரச்சனையில் பெண்கள் இருவர் உயிருடன் புதைக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச ரேவா மாவட்ட ஹினோடா ஜோரோட் கிராமத்தை சேர்ந்தவர்கள் மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே. இவர்கள் குத்தகைக்கு எடுத்திருந்த நிலத்தில் சிலர் சாலை அமைக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே போராட்டம் நடத்தினர். 

madhyapradesh women buried in land

அப்போது அங்கிருந்த லாரி டிரைவர் லாரியில் இருந்த சரளை கற்களை அவர்கள் மீது கொட்டி பாதியளவு உடலை நிலத்தினுள் புதைத்துள்ளனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் மணலை அகற்றி அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறுவன் உட்பட மூவர் கொலை; அம்மாவிற்காக கொலை செய்தேன் - குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

சிறுவன் உட்பட மூவர் கொலை; அம்மாவிற்காக கொலை செய்தேன் - குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

கைது

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், லாரி டிரைவரை கைது செய்துள்ளனர். மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். குடும்ப நில தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் மாநில தலைவர் ஜிதேந்திர பத்வாரி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாஜக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாரபட்சமின்றி விரைவாக விசாரித்து நீதி வழங்கப்படும் என அந்த சகோதரிகள் உங்கள் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.