சிறுவன் உட்பட மூவர் கொலை; அம்மாவிற்காக கொலை செய்தேன் - குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

Cuddalore
By Karthikraja Jul 20, 2024 05:30 AM GMT
Report

கடலூர் அருகே 3 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி பரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர்

கடலூர், நெல்லிக்குப்பத்தை அடுத்திருக்கும் காராமணிக்குப்பம் பகுதியில் 10 வருடமாக வசித்து வந்தவர் சுரேஷ் குமார். இவர் உடல்நல குறைவு காரணமாக சமீபத்தில் இறந்த நிலையில் அவர் மனைவி கமலேஷ்வரி (60)தனது இரு மகன்களுடன் வசித்து வந்தார். இவருடைய மூத்த மகன் சுரேந்திரகுமார் காக்கிநாடாவில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் இளைய மகன் சுகந்தகுமார் பணியாற்றி வந்தார். 

cuddalore murder

.மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு, 10 வயதில் நிஷாந்த்குமார் மகன்உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தாய் மற்றும் மகனை பார்க்க சுகந்த குமார் வந்திருந்த நிலையில் அதிகாலையில் அவர்கள் வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் கமலேஸ்வரியை செல்போனில் தொடர்பு கொண்டிருக்கின்றனர். 

கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 12 நாட்களாக நடந்த கொடூரம்

கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 12 நாட்களாக நடந்த கொடூரம்

கருகிய உடல்கள்

ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை என்றதும், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்திருக்கின்றனர். இதனையடுத்து அங்கு விரைந்த நெல்லிக்குப்பம் போலீஸார், வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது, கமலேஸ்வரி சுகந்தகுமார் மற்றும் சிறுவன் நிஷாந்த்குமார் வேறு வேறு அறைகளில் தீயில் கருகிக் கொண்டிருந்தனர். 

cuddalore murder

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்களை உள்ளே வரவழைத்து தீயை அணைக்கும்படி கூறினர். இதன் பின் மூவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதன் பின் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை 21 வயது சங்கர் ஆனந்த் என்பவரை கைது செய்தனர்.

வாக்கு மூலம்

அவருடன் நடத்திய விசாரணையில் “ எனது அம்மா லட்சுமி சில மாதங்களுக்கு முன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கு முக்கிய காரணம் சுகந்தகுமார்தான். அதனால் அவரை தீர்த்துக்கட்ட கடந்த 6 மாதமாக திட்டமிட்டு, ஜூலை 13 ம் தேதி சுதன்குமார் வீட்டுக்குள் புகுந்து அவரை மட்டும் கொலை செய்ய முயற்சித்தேன். ஆனால் அவரது அம்மா கமலேஸ்வரி என்னை தடுக்க முயன்றதால் இருவரையும் கொலை செய்தேன். 

cuddalore murder

இதனையடுத்து சிறுவனை வெளியில் விட்டால் நடந்த விஷயங்களை சொல்லிடுவான் என்பதால் அவனது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என கூறினார். மேலும் மறுநாள் (ஜூலை 14 ஆம் தேதி) நண்பர்களுடன் சென்று பெட்ரோல் ஆசிட் ஊற்றி 3 பேரையும் எரித்தோம். பின்னர் பீரோவில் இருந்த பணம் நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பித்தோம். போலீஸ் கண்டு பிடிக்காது என நினைத்தோம்” என்று வாக்கு மூலம் அளித்துள்ளார்.