கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 12 நாட்களாக நடந்த கொடூரம்
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள மோடி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஜூன் 24-ம் தேதி கல்லூரிக்கு சென்ற பின் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி அலைந்தனர்.
எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பின், ஜூலை 6 ம் தேதி காசியாபாத்தில் உள்ள போஜ்பூர் காவல் நிலையம் அருகே அந்த மாணவியை, ஒரு கும்பல் விட்டு சென்றது. இது தொடர்பாக தகவலறிந்த அவரது குடும்பத்தினர் மாணவியை மீட்டனர்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை
இது குறித்து அவரிடம் விசாரித்த போது, ஜூன் 24-ம் தேதி கல்லூரிக்கு சென்ற போது காலை 11 மணியளவில் தன்னை இருவர் கடத்தி சென்றதாகவும், இதனையடுத்து மீரட் மற்றும் ஜம்முவில் உள்ள ஹோட்டலில் வைத்து 12 நாட்களாக 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மேலும் அந்த கொடூர செயலை அவர்கள் வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆனால் காசியாபாத் மற்றும் மீரட் காவல்துறையினர், தங்கள் அதிகார வரம்பிற்குள் வரவில்லை எனக்கூறி வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர். இதைனையடுத்து மாணவியின் குடும்பத்தினர், மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மாணவி தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாணவி குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.