Saturday, May 3, 2025

பெற்ற தாயை தீ வைத்து கொளுத்திய மகன் - அதை மகனே வீடியோ எடுத்த கொடூரம்!

Uttar Pradesh
By Karthikraja 10 months ago
Report

பெற்ற தாயை மகனே தீ வைத்து கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்திரபிரதேசம் 

உத்திரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள கைர் காவல் நிலையத்திற்கு சொத்து பிரச்சனை தொடர்பான வழக்கு ஒன்று வந்துள்ளது. இவ்வழக்கில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண (17.07.2024) பிற்பகல் 2 மணி அளவில் ஹேமலதா என்ற பெண் மற்றும் அவருடைய மகன் கவுரவ்(22) இருவரும் வந்துள்ளனர்.

uttarpradesh khair police station

அப்போது தாய் மீது மகன் பெட்ரோல் ஊத்தி உள்ளார். இதன் பின் தன் கையில் உள்ள செல்போன் மூலம் வீடியோ எடுத்துக்கொண்டே வருகிறார். தாயின் கையில் இருந்த லைட்டரை போலீசார் பிடுங்க முயன்ற போது லைட்டர் கீழே விழுகிறது. உடனே வீடியோ எடுத்துக்கொண்டிருந்த மகன் கவுரவ் கீழே விழுந்த லைட்டரை எடுத்து அவரின் உடலில் பற்ற வைத்தார். 

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுங்கள் - நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுங்கள் - நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்

கைது

உடனே அந்த பெண்ணின் உடலில் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. அங்கிருந்த காவலர்கள் மண், சாக்கு பை முதலானவரை அந்த பெண் மீது வீசி தீயை அணைக்க முயன்றுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை அவரது மகன் கவுரவ் தன்னுடைய மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

uttarpradesh man set fire on mother

40% உடல் தீக்காயம் அடைந்த அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், தீயை அணைக்க முயன்ற சில காவலர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பெண்ணின் மகன் கவுரவ் கைது செய்யப்பட்டுள்ளார்.