கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுங்கள் - நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்

Salem
By Karthikraja Jul 16, 2024 01:43 PM GMT
Report

 கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்ட சொல்லி விட்டு இளைஞர் தற்கொலை செய்துள்ளார்.

சேலம்

சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்தவர் சாதிக் என்பவருடைய மகன் பயாசுதீன்(20). 9 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் செவ்வாய்பேட்டையில் உள்ள வெள்ளிப்பட்டரையில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது வேலைக்கு செல்லாமல் இருந்துள்ள அவரை வேலைக்கு போக சொல்லி தாய் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. 

yercaud bend

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்ற பயாசுதீன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாய் மற்றும் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். இரவு 9 மணியளவில் ஏற்காட்டிற்கு சென்று விஷம் குடித்து விட்டதாக அவரது அண்ணன் மற்றும் நண்பர்களுக்கு வாட்சாப்பில் தகவல் அனுப்பியுள்ளார் பயாசுதீன்.

6 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - 40 வயது நபர் கொடூர செயல்

6 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - 40 வயது நபர் கொடூர செயல்

உயிரிழப்பு

உடனே ஏற்காடுக்கு சென்ற அவரது நண்பர்கள் இரவு 10 மணி அளவில் மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சாலையோரதில் பயாசுதீன் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்துள்ளனர். உடனே பயாசுதீனை தங்கள் பைக்கில் ஏற்றிக்கொண்டு கீழே இறங்கினர். அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடி பகுதியிலிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் பயாசுதீனை ஏற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுங்கள் - நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்த இளைஞர் | Salem Youth Took Wrong Decision After Send Message

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் பற்றி தகவலறிந்த ஏற்காடு காவல் துறையினர் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்த பயாசுதீன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பின் அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாட்சாப் செய்தி

இது குறித்து பயாசுதீன் நண்பர்களிடம் விசாரணை செய்த காவல் துறையினர், அவர்களுக்கு வாட்சாப்பில் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்துள்ளனர். இதில் "தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விட்டேன். அதனால் மருந்தை குடித்துவிட்டு ஏற்காட்டிற்கு வந்து விட்டேன். கீழே இறங்குவதற்குள் இறந்து விடுவேன். நான் இறந்து விட்டால் செவ்வாய்பேட்டை பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டுங்கள், என் உடலை நல்ல முறையில் அடக்கம் செய்யுங்கள்.

நான் சைனஸ் நோயால் அவதிப்பட்டு வந்தால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஏற்கனவே 2 முறை எலி மருந்து சாப்பிட்டும் தப்பித்து விட்டேன். தற்போது எப்படி சாவது என்று தெரிந்து கொண்டேன். அந்த மருந்தை குடித்து இருக்கிறேன்” என குறுஞ்செய்தி அனுப்பி இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.