ஆசியக் கோப்பை: 65ரன்களில் சுருண்ட இலங்கை - மகுடம் சூடியதா இந்தியா

Cricket Sri Lanka India
By Sumathi Oct 15, 2022 10:10 AM GMT
Report

ஆசியக் கோப்பையில், இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

ஆசியக் கோப்பை

வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

ஆசியக் கோப்பை: 65ரன்களில் சுருண்ட இலங்கை - மகுடம் சூடியதா இந்தியா | Womens Asia Cup Indvsl Sri Lanka

பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியா மிரட்டல்

அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

ஆசியக் கோப்பை: 65ரன்களில் சுருண்ட இலங்கை - மகுடம் சூடியதா இந்தியா | Womens Asia Cup Indvsl Sri Lanka

இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. அதனைத்தொடர்ந்து, 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.