பாகிஸ்தானிடம் தோற்றதற்கு இவர்கள் தான் காரணம் - ரோகித் சர்மா பரபரப்பு பேச்சு
பாகிஸ்தான் அணியிடம் தோற்றதற்கு இவர்கள் தான் காரணம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 60 ரன்களும், கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா தலா 28 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாதப் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
த்ரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்
இதன்பின் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் முக்கிய வீரரான பாபர் அசாம் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
பின்னர் களம் இறங்கிய முகமது நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கொடுத்தார். நீண்ட நேரம் தாக்குபிடித்து வழக்கம் போல் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் 52 பந்தில் 71 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
தோல்விக்கு இது தான் காரணம் - ரோகித் சர்மா
தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களை விட சிறப்பாக விளையாடியதாக தெரிவித்தார். 181 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான ரன்கள் தான்.
எந்த ஆடுகளத்தில் விளையாடினாலும் 181 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்த போது ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. முகமது ரிஸ்வான் - முகமது நவாஸ் இடையேயான பார்ட்னர்சிப்பை பிரிக்க அதிக நேரம் தேவைப்பட்டது.
இருவரும் எங்கள் திட்டங்களை தகர்த்துவிட்டனர். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டி. பாகிஸ்தான் வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட சிறப்பாக ஆடினர். இந்த போட்டியின் மூலம் கிடைத்துள்ள அனுபவம் அடுத்தடுத்த போட்டிகளில் எங்களுக்கு உதவியாக இருக்கும். தவறுகளை திருத்தி கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.