கணவரை கொடூரமாக கொன்று வேதனையை புத்தகமாக எழுதிய பெண்!
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரை தானே கொன்றுவிட்டு, துக்கத்தை புத்தக வடிவில் வெளியிட்டு கைதாகியுள்ளார்.
புத்தகம்
மேற்கு அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தை சேர்ந்தவர்கள் கூரி ரிச்சின்ஸ், இவருக்கு 33 வயது மற்றும் அவரின் கணவர் 39 வயதான எரிக் ரிச்சின்ஸ்.
கூரி ரிச்சின்ஸின் கணவர், கடந்த வருடம் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மூன்று ஆண் குழந்தைகளுக்கு தாயான கூரி ரிச்சின்ஸ், ‘குட் திங்ஸ் யூட்டா’ என்ற தலைப்பில் தந்தை இல்லாத துக்கத்தை கையாள்வது தொடர்பாக குழந்தைகளுக்கான ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
இதன் புரமோஷன்களில் கலந்து கொண்டு இவரது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
கொடூர கொலை
இந்நிலையில், இவர் கடந்த`2022-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி கமாஸில் உள்ள வீட்டில் எரிக் மற்றும் கூரி ஆகிய இருவரும் வீடு விற்றதை கொண்டாடும் வகையில் தங்கள் வீட்டிலேயே இரவு விருந்து தயார் செய்து மகிழ்ச்சியுடன் இருந்துள்ளனர்.
இந்தக் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் இவர் தனது கணவர் எரிக்கிற்கு கலவையான ஓட்கா பானத்தை கொடுத்துள்ளார். பின்னர் தன் குழந்தை அழுததால் அவரை சமாதானம் படுத்துவதற்காக வேறு அறைக்கு சென்றுவிட்டார்.
திரும்பி வந்து பார்த்தபோது இவர் மயக்க நிலையில் இருந்ததாகவும், இவர் 911-க்கு தொடர்பு கொண்டுள்ளார் அப்பொழுது போலீசார் அங்கு வந்து அவர் இறந்ததாக கூறியுள்ளனர்.
மேலும், இவரது கணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதும், அவர் ஃபென்டானிலின் என்ற தடை செய்யப்பட்ட வலி நிவாரணி மருந்தை ஐந்து மடங்கு அதிகமாக உட்கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து விசாரணையில், தன் குழந்தையை சமாதானப்படுத்த சென்றதாகக் கூறிய அந்த நேரத்தில் அவரது போனில் இருந்து ஒருவருக்கு தொடர்ந்து செய்திகள் அனுப்பப்பட்டு பின்னர் அவை அனைத்தும் டெலீட் செய்யப்பட்டுள்ளன. ஆனால் விசாரணையில், தன்னிடம் போன் இல்லை கணவர் இருந்த அறையிலேயே போனை விட்டு சென்றதாக சொல்லியதில் சந்தேகம் அடைந்து அவரை கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அடையாளம் தெரியாத ஒருவர் தடை செய்யப்பட்ட ஃபென்டானிலின் மருந்தை, கூரி ரிச்சின்ஸுக்கு விற்றுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.