பல ஆண்களுடன் தவறான தொடர்பில் இருந்த பெண் - உறவினரின் வெறிச்செயல்!
திருமணமான பின்பு முறைகேடான தொடர்பில் இருந்த பெண்ணை அவரது உறவினர் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளத்தொடர்பு
ராமநாதபுரம் மாவட்டம், காவனூர் பகுதியில் உள்ள ஆசாரிமடத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
ஆனால் இவர் இடையர்வலசை பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு இவரது தாய் பாக்கியமும் ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த கணவர் கண்டித்துள்ளார், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தொடர்ந்து அவரது தந்தை ரவியும் கண்டித்துள்ளார்.
கொலை
இந்நிலையில், தாய் பாக்கியமும் இவரும் சேர்ந்து, இவரது தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றனர்.
இதனால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்த இருவரும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்தனர்.
தொடர்ந்து, கொத்தனார் ஒருவருடன் இவருக்கு முறையற்ற தொடர்பு ஏற்பட்டது. இந்த செயலால் மேலும் அதிர்ச்சி அடைந்த ரவியின் சகோதரர் மகன் மணி என்பவர் ஆத்திரமடைந்து நேற்று மாலை பவித்ரா தனியாக இருந்த நேரத்தில் இரும்புக் கம்பியால் அடித்து அவரை கொலை செய்துள்ளார்.
அதன்பின் தப்பி ஓடிய மணியை ஊர்மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.