ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலி .. இரும்பு ராடால் அடித்து கொன்ற கொடூரன் : தர்மபுரியில் பகீர் சம்பவம்

Sexual harassment Crime
By Irumporai Jan 05, 2023 05:10 AM GMT
Report

கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த போது இரண்டாவது முறை வர மறுத்ததால் இரும்பு ராடால் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்த கள்ளக்காதலன் . கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்காதல்

தர்மபுரி மாவட்டம் கீழானூர் காட்டுப்பகுதியில் 32 வயது மிக்க பெண்ணின் சடலம் ஒன்று இருந்ததை பார்த்த போலீசார் , அந்த சடலத்தை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலி .. இரும்பு ராடால் அடித்து கொன்ற கொடூரன் : தர்மபுரியில் பகீர் சம்பவம் | Killed His Girlfriend With An Iron Rod

பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் அப்பெண் சித்தேரி அடுத்த வெள்ளம் பள்ளியை பகுதியைச் சேர்ந்த பார்வதி என்பது தெரிய வந்திருக்கிறது.

கள்ள உறவு 

ஆண்டியப்பன் என்பவரை கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த கொண்டு வாழ்ந்த பார்வதி, கடந்த 9 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால் குழந்தைகளோடு கீரை பட்டியில் தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். கடந்த ஒருவருடமாக சக்திவேலுவுடன் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.

முதல் மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் இரண்டாவது மனைவிக்கு குழந்தை இல்லாத நிலையில் பார்வதி உடன் கள்ள உறவு வைத்து வந்திருக்கிறார் சக்திவேல். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கிறார்கள். 

கொடூரமாக கொன்ற காதலன்

அந்த வகையில் கீழானூர் காப்பு காட்டுக்குச் சென்று இருவரும் தனிமையில் இருந்திருக்கிறார்கள். அப்போது மீண்டும் இரண்டாவது முறை உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார். அதற்கு வர மறுத்திருக்கிறார் பார்வதி , ஆகவே வேறு ஒரு நபருடன் கள்ள உறவில் இருப்பதாக பார்வதி மீது சந்தேகப்பட்ட சக்திவேல், மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து பார்வதி முகத்தை அடித்து சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு

இரண்டாவது மனைவி வீட்டில் போய் பதுங்கி இருக்கிறார் . போலீசார் விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தன் ஆசைக்கு வர மறுத்த கள்ள காதலியை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலனின் செயல் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.