புடவை கட்டினால் புற்றுநோய் ஏற்படுமா? வெளியான அதிர்ச்சி தகவல் - கேட்டா ஆடிப்போவீங்க!
புடவை அணியும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்.
புடவை கட்டினால்..
இந்தியாவில் புடவை என்பது அதிகம் பெண்களால் அணியப்படும் ஒரு உடையாகும் அதுமட்டுமின்றி புடவை நம் பாரம்பரிய உடை ஆகும். இந்த நிலையில் புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்ற தகவல் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம்,வர்தாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் பிகாரில் உள்ள மதுபானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் புடவை அணிவது குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தைச சேர்ந்த இரு பெண்களை மருத்துவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர். அதில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பெண்கள் புடவை அணியும்போது பாவடையையும் அணிகின்றனர்.
அதிர்ச்சி தகவல்
அப்போது, சேலை கலையாமலும், அவிழ்ந்து விடாமலும் இருப்பதற்காக பாவாடையை மிகவும் இறுக்கமாக அணிகின்றனர். தொடர்ந்து இதுபோல இறுக்கமாக அணிவதன் மூலம் பெண்களுக்கு இடுப்பு பகுதியில் அழற்சி, புண் போன்றவை ஏற்படுகிறது.
இந்த அழற்சி, புண் ஆகியவை ஒருகட்டத்தில் தோல் புற்றுநோய் ஏற்படும் நிலையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாட்கள்
பெண்கள் பயன்படுத்தும் உடையில் புடவை பெரும் பங்காற்றியுள்ளது. இந்த தகவல் பல புடவை அணியும் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.