செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் மூளை புற்றுநோய்? ஆய்வில் வெளியான உண்மை!

World
By Swetha Sep 06, 2024 04:44 AM GMT
Report

செல்போன் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய் ஏற்படுமா என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது .

செல்போன் 

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாட்டு என்பது பலரது மத்தியில் பரவலாக அதிகரித்துள்ளது. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று பேசப்படுகிறது. மூளை புற்றுநோய் தாக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.

செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் மூளை புற்றுநோய்? ஆய்வில் வெளியான உண்மை! | Does Using Phone Causes Brain Cancer Truth Behind

இது குறித்து உலக சுகாதார அமைப்பு மற்றும் இதர சர்வதேச சுகாதார அமைப்புகள், செல்போன் பயன்பாட்டுக்கும், பல்வேறு உடல் உபாதைகளுக்கும் சம்பந்தம் இருப்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று கூறி வந்துள்ளன.

இருப்பினும், இது பற்றி விரிவான ஆய்வு நடத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளன. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு, செல்போன் பயன்பாட்டுக்கும், மூளை புற்றுநோய்க்கும் சம்பந்தம் உள்ளதா என்று அறிய ஆய்வு நடத்தியது. 10 நாடுகளை சேர்ந்த 11 ஆய்வாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பள்ளி மாணவிகளை சீரழித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மன்னன் - செல்போன் சோதனையில் அதிர்ந்த போலீசார்!

பள்ளி மாணவிகளை சீரழித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மன்னன் - செல்போன் சோதனையில் அதிர்ந்த போலீசார்!

மூளை புற்றுநோய்

ஆஸ்திரேலிய அரசின் கதிரியக்க பாதுகாப்பு குழுவும் அதில் உள்ளன. கடந்த 1994ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை நடந்த 63 ஆய்வுகளின் முடிவுகளும் இந்த ஆய்வில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு, அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் மூளை புற்றுநோய்? ஆய்வில் வெளியான உண்மை! | Does Using Phone Causes Brain Cancer Truth Behind

அந்த ஆய்வில் கூறப்பட்டிருப்பது, செல்போன் பயன்படுத்துவதற்கும், மூளை புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகரிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களுக்கும், 10 ஆண்டுகளுக்கு மேலாக செல்போன் பயன்படுத்தி வருபவர்களுக்கும் கூட இது பொருந்தும்.

செல்போன் பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ளது. அதற்கேற்றாற்போல், மூளை புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கவில்லை. இதில் இருந்தே இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.