ஆண் நண்பருடன் தங்கி சிகரெட் மற்றும் மது அருந்திய பெண் மர்ம மரணம் - நடந்தது என்ன?
ஆண் நண்பருடன சேர்ந்து மது அருந்திய பெண் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்
திருச்சி மாவட்டம் செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஷாமிலி(26). இவர் ஒரு அழகுகலை நிபுணர் ஆவார். இவர் திருச்சியில் இருந்து சென்னைக்கு வேலை தேடி கடந்த வாரம் வந்துள்ளார். அப்போது சூளைமேடு, சண்முகம் சாலை கில்நகரில் உள்ள தனது ஆண் நண்பர் முகமது நபிக் (31) என்பவர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
சென்னை சூளைமேட்டிலேயே கடந்த 2 நாட்களாக அவர் தங்கியிருந்துள்ளார். இரண்டு நாட்கள் கழித்து ஷாமிலிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரது ஆண் நண்பர் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அந்த மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஷாமிலிக்கு இதயத்துடிப்பு குறைவாக இருப்பதால் அவரை மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
நடந்தது என்ன?
இதையடுத்து, அங்கு செல்லும் வழியிலேயே ஷாமிலி இறந்து விட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷாமிலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் டத்திய முதல்கட்ட விசாரணையில், ஷாமிலி, தனது நண்பர் முகமது நபிக்குடன் சேர்ந்து அறையில் சிகரெட் பிடித்து கொண்டு, மது அருந்தியதாக தெரியவந்தது.
இந்த நிலையில், அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இளம்பெண் உயிரிழந்தாரா? அல்லது அவருடைய இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.