வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை..போலீசாருக்கு வந்த சந்தேகம் - மருமகன் வெறிசெயல்?

Tamil nadu Crime Death Theni
By Swetha Dec 19, 2024 12:00 PM GMT
Report

வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டி கொலை செய்யபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் கொலை..

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் லீலாவதி (37). இவர் அதே பகுதியில் ஒரு வாடைகை வீடு எடுத்து தங்கி வருகிறார்.இன்று காலை அவரது வீட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை..போலீசாருக்கு வந்த சந்தேகம் - மருமகன் வெறிசெயல்? | Women Was Murdered Brutally Police Investigates

இந்த தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட லீலாவதியின் கணவர் சின்னச்சாமி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. அதன் பிறகு தனது மகள் கௌசல்யாவை திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

துண்டு துண்டாக சூட்கேசில் கிடந்த பெண் உடல் - கொலையின் பின்னணி என்ன?

துண்டு துண்டாக சூட்கேசில் கிடந்த பெண் உடல் - கொலையின் பின்னணி என்ன?

மருமகன்? 

மேலும் கௌசல்யா - பிச்சைமுத்து தம்பதியருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை பிரிந்து வந்த கௌசல்யா தனது தாயின் வீட்டிலேயே தங்கியுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை..போலீசாருக்கு வந்த சந்தேகம் - மருமகன் வெறிசெயல்? | Women Was Murdered Brutally Police Investigates

அதேசமயத்தில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே அடிக்கடி அல்லிநகரம் வரும் பிச்சைமுத்து, மனைவி கௌசல்யா மற்றும் மாமியார் லீலாவதியுடன் வாக்குவாதம் செய்து தகராறு செய்வதை

வழக்காம வைத்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் பிச்சைமுத்து லீலாவதியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.