கணவனை விட்டு வா.. கள்ளக்காதலால் வந்த வினை - பெண்ணை கொடூரமாக கொன்ற நபர்!
கணவனை விட்டு வர மறுத்த பெண்ணை கள்ளக்காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் சிஜர்சி கிராமத்தை சேர்ந்தவர் ஷில்பி. இவர் தன் கணவர் அஜய் மற்றும் தனது 4 வயது மகனுடன் அங்கு வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில் ஷில்பி கடந்த 3 ஆண்டுகளாக பிரதீப் என்ற நபருடன் திருமணம் மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.
நீண்ட நாட்களாக ஷில்பியை அவளது கணவனை விட்டு தன்னுடன் வந்துவிடுமாறு பிரதீப் கட்டாயப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் ஷில்பியின் கணவர் வேலைக்கு சென்ற பிறகு அவரது வீட்டிற்கு பிரதீப் சென்றுள்ளார்.
கொலை
அப்போது மீண்டும் கணவன் மற்றும் மகனை விட்டுவிட்டு தன்னுடன் வந்து விடுமாறு பிரதீப் தொடர்ந்து கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு ஷில்பி சம்மதிக்கவே இல்லை.
இதனையடுத்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் எற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த பிரதீப் ஷில்பியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்த நிலையில், ஷில்பியை பிரதீப் கொலை செய்ததை நேரில் பார்த்த,
அவரின் 4 வயது மகன் நடந்த சம்பவம் அனைத்தையும் போலீசாரிடம் தெரிவித்தார். இதன் பிறகு போலீசார் பிரதீப்பை கைது செய்து அவரிடம் விசாரணை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.