அம்மா சொன்ன ஜோக் - 5 ஆண்டு கோமாவில் இருந்து எழுந்த பெண்..! அப்படி என்ன ஜோக்..?
நம்பமுடியாது பல அதிசயங்கள் உலகில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
கோமா
அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் நிகழ்ந்து பெரும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. அமெரிக்கா மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர் ஜெனிஃபர் ஃப்ளெவெல்லன். கடந்த 2017 -ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார்.
ஜெனிஃபரின் 60 வயது தாயார் பெக்கி மீன்ஸ் இவருக்கு கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தார். எப்படியும் தன் மகளை இந்த கோமாவில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு யுக்திகளை செய்து போராடியும் வந்துள்ளார் பெக்கி.

15 நாளா கோமா...மூளையில் 9 டைட்டானியம் கம்பிகள்!! பரிதாபக்குறிய நிலையில் "மீனாக்குமாரி" முமைத் கான்!!
ஜோக்
5 ஆண்டுகளாக நீடித்த போராட்டத்தை ஒரு ஜோக் சொல்லி முடித்து வைத்துள்ளார் பெக்கி. ஆகஸ்ட் 25, 2022 அம்மாவின் ஜோக்கை கேட்டு சிரித்தபடியே எழுந்து இருக்கிறார் ஜெனிஃபர். இதனை ஜெனிஃபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரால் நம்ப முடியவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், இது அரிதான விஷயம் தான் என குறிப்பிட்டு, ஜெனிஃபர் தற்போது மெல்ல உடல் மற்றும் மனநலன் தெரிவருவதாக குறிப்பிட்டார். ஆனால், பெக்கி அப்படி என ஜோக் சொன்னார் என்று என்பது தற்போது வரையில் மர்மமாகவுள்ளது.