40 வயதிற்குட்பட்ட பெண்கள் கணவரிடம் இதைத்தான் விரும்புவார்கள் - என்னென்ன தெரியுமா?
40 வயதான பெண்கள் தங்களது கணவரிடம் விரும்பும் விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
கணவன் - மனைவி
ஒவ்வொரு பெண்ணும் நேர்மையான ஆண்களை தான் விரும்புகிறார்கள். முதிர்ந்த பெண்கள் அதை அதிகம் மதிக்கிறார்கள். உணர்ச்சி ரீதியாக நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

இதற்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பல ஆண்கள் தங்கள் துணை எப்போதும் அழகாகவும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் பல விஷயங்களில் தங்கள் துணையை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறார்கள்.
அடிப்படை ஆசைகள்
ஆனால் எந்தப் பெண்ணும் இப்படி ஒப்பிடுவதை விரும்புவதில்லை. பெண்கள் அவர்கள் கருத்தில், மரியாதை மற்றும் ஆதரவின் செயல்களால் ஈர்க்கப்பட விரும்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, துணைக்கு தேவையான நேரத்தையும் கொடுக்க வேண்டும்.

அதேநேரம், 24 மணி நேரமும் காதலோடு சுற்றிவருவதை விரும்பவில்லை. பெண்கள் தங்கள் கணவர் எல்லார் முன்னிலையிலும் அன்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒருவேளை கணவன் அதன்படி நடக்கவில்லை என்றால் அதை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு சண்டை போட நேரிடலாம் உறவில் விரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
அன்பு, காதல் என்பதெல்லாம் இயந்திரத்தனமானது அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அந்த அன்பில் திளைத்திருக்க அதற்கென தனியே உங்களுடைய கற்பனை திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். நிறைய எதிர்பார்ப்புடனும் ஆர்வத்துடனும் உங்களவரிடம் அன்பை செலுத்துங்கள். அது உங்களுக்கு இரட்டிப்பாக பெருகும்.
நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இஸ்ரேல் தேர்தல்: நெசெட் நாடாளுமன்றத்தின் பின்னணி IBC Tamil