டூவீலரில் டிரிபிள்ஸ் - போலீஸிடம் போட்டுக் கொடுத்தவரை செருப்பால் அடித்த பெண்கள்!
டிரிபிள்ஸ் சென்ற பெண்கள், புகார் அளித்த நபரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரிபிள்ஸ்
சென்னை, அடையார் எம்ஜிஆர்- ஜானகி கல்லூரி எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஓரு இருசக்கர வாகனத்தில் மூன்று பெண்கள் பயணித்தை பார்த்து அவர்களை பிடித்து விசாரித்தனர்.
அதில், உடல்நிலை சரியில்லை என கூறிய பெண்கள் சற்றும் காவலரை மதிக்காமல் அங்கிருந்து வேகமாக தனது ஆண் நண்பர்களுடன் டூவீலரில் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, இதனை கவனித்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த அருண் குமார் விக்ரம் என்ற இளைஞர்,
தாக்கிய பெண்கள்
அவர்களை புகைப்படம் எடுத்து தனது ட்விட்ட்ர் பக்கத்தில் பகிர்ந்து சென்னை காவல்துறைக்கு புகாரளித்தார். இதனை அறிந்த அந்த பெண்கள், இளைஞரை நடுரோட்டில் தாக்கி ஆபாசமாக பேசியுள்ளனர்.
மேலும் அவரை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த போலீஸார் விரைந்து வந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதனால், பாதிக்கப்பட்ட இளைஞர் தாக்குதல் நடத்திய 3 பெண்கள் மீது புகாரளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விவாகரம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.