நடுரோட்டில் மருமகனை செருப்பால் அடித்த மாமியார்...! - உத்தரபிரதேசத்தில் பரபரப்பு
உத்தரபிரதேசத்தில் பொதுஇடத்தில் வைத்து மருமகனை மாமியார் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கோட்வாலி பகுதியில் உள்ள அனங்க்பெட்டா கிராமத்தின் மஜ்ரா பண்டித்பூர்வா பகுதியை சேர்ந்தவர் சந்த் பாபு, இவருக்கும் ஹரியவானில் உள்ள பீலமஹுவா கிராமத்தில் வசிக்கும் ஹினா பானோவுக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இதனிடையே கடந்த 2 மாதங்களாக சந்த் பாபு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அவரது மனைவி ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி நடந்த சம்பவம் தொடர்பாக கணவர் மீது காவல் நிலையத்தில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் தனிப்பட்ட வேலைகளுக்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திரும்பிய சந்த் பாபு, அருகிலுள்ள நீதிமன்ற வளாகத்தில் மாமியாரை சந்தித்துள்ளார். தனது மகளை அடித்த கோபத்தில் இருந்த மாமியார் தனது செருப்பைக் கழற்றி சந்த் பாபுவை அடித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கு வந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர்.
இதையடுத்து, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.இதனிடையே பாதிக்கப்பட்ட சந்த் பாபு, மாமியார் தாக்கியது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.