நர்ஸ் வேடத்தில் காதலனின் மனைவிக்கு ஸ்கெட்ச் - நரம்பில் காற்றை செலுத்தி கொல்ல முயற்சி!
கள்ளகாதலனின் மனைவியை கொல்வதற்கு நர்ஸ் வேடத்தில் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொலை முயற்சி
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா, இவருக்கு 25 வயது. கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
அங்கு நர்ஸ் வேடத்தில் வந்த பெண் ஒருவர் இவருக்கு காற்றை அடைத்த இன்ஜெக்ஷனை நரம்பில் செலுத்த முயன்றார். அப்பொழுது அங்கு அருகில் இருந்த அவரது தாய் தடுத்தபோதிலும் இவர் ஊசி போட முயன்றார். அந்த பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர்.
விசாரணை
இந்நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த பெண் அனுஷா (25) என்றும், அவர் அந்த மருத்துவமனையில் மருந்தாளராக உள்ளார் என்றும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் சினேகாவின் கணவர் அருண், அனுஷாவின் கள்ளக்காதலன் என்றும் இவர்களது திருமணம் கைகூடாததால் அவர் மனைவியை கொல்ல முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பநவதில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் காவல்துறை தலைவர் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஆணைய உறுப்பினர் பினாகுமாரி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.