மெத்தனம் காட்டிய போலீசார் - தவிக்க விட்டு ஓடீய போலீஸ் கணவரால் பலியான இளம் பெண்!

Tamil nadu Tenkasi
By Vinothini Aug 10, 2023 06:08 AM GMT
Report

திருமணம் முடிந்து கணவர் செய்த காரியத்தால் பெண் தற்கொலை செய்துள்ளார்.

தம்பதியினர்

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி கிராமத்தை சேர்ந்தவர் குமுதா, இவருக்கும் ஆவுடையானூர் அருகே உள்ள ராயப்பநாடானூர் கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் திருமணம் ஆனது. இவர் சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது.

women-suicide-in-tenkasi

ஆனால் இவர்கள் 25 நாட்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு கணவர் சென்னைக்கு சென்று வீடு பார்த்துவிட்டு அழைப்பதாக கூறி சென்றவர் திரும்பி வரவே இல்லை, இவர் போனில் அழைத்தாலும் அதனை நிராகரித்து விடுவதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்நிலையில், குமுதாவிடம் சுதர்சன் "உன்னை எனக்கு பிடிக்கவில்லை, நான் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறேன்" எனவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பலமுறை பேசியுள்ளார், அப்பொழுது அவர் கேட்ட வார்த்தைகளால் திட்டி விடுவதாக கூறியுள்ளார்.

women-suicide-in-tenkasi

மேலும், இவரது கணவர் வந்து அளித்து செல்வார் என்ற ஏக்கத்தில் அவரது தாய் வீட்டில் இருந்துள்ளார், நேற்று முன்தினம் திடீரென அவரது உறவினர்களுடன் சேர்ந்து கணவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தற்பொழுது நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.