திருமணம் முடிந்த கையோடு மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன்!

India Crime
By Sumathi Nov 13, 2022 05:30 PM GMT
Report

மனைவியை வெளியூருக்கு அழைத்துச் சென்று வேறொருவருக்கு கணவன் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி சம்பவம்

ஒடிசா, கலஹண்டி பகுதியைச் சேர்ந்தவர் கிரா பெருக்(25). இவர் சில தினங்களுக்கு முன் பூர்ணிமா என்ற பெண்னை திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், திருமணம் முடிந்தவுடன் வேலை தேடி டெல்லி செல்வதாகக் கூறி மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

திருமணம் முடிந்த கையோடு மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன்! | Man Sells Wife For Money In Odisha

அங்கு, தனது மனைவியை வேறொரு நபருக்கு பணத்திற்காக விற்றுள்ளார். மேலும் அவரிடம் இருந்து பெரும் தொகையையும் வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, பூர்ணிமா தனது தந்தை குலமணி போய்க்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார்.

உடனே, அவரது தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.