மனைவியின் கிட்னியை விற்ற கணவன் - 2வது திருமணம் செய்து உல்லாசம்!

India Marriage Relationship Crime
By Sumathi Sep 15, 2022 02:03 PM GMT
Report

மனைவியின் கிட்னியை விற்று இரண்டாவது திருமணம் செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக் காதல்

ஒடிசா மாநிலம் கோட மேட்டா என்ற பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் கந்து. வங்கதேசத்தில் இருந்து அகதியாக வந்த இவருக்கும் ரஞ்சிதா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

மனைவியின் கிட்னியை விற்ற கணவன் - 2வது திருமணம் செய்து உல்லாசம்! | A Husband Who Sold His Wife Kidney And Remarried

மது போதைக்கு அடிமையாக இருந்து வந்த பிரசாந்த் அவரது குடும்பத்தை சரிவர கவனித்து வராமல் இருந்துள்ளார். மேலும் அவருக்கு வேறொரு பெண்ணுடன் சவகாசம் இருந்து வந்துள்ளது. இதனால் அவரது இரகசிய காதலியுடன் வாழ வேண்டும் என்று நினைத்த அவர்,

கணவன் சதிச் செயல்

தன்னிடம் பணமில்லை என்பதை உணர்ந்தார். இதனால் குறுகிய காலத்தில் பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று எண்ணிய அவர் ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, தனது மனைவி ரஞ்சிதாவின் கிட்னியில் கல் இருப்பதாக நம்ப வைத்து,

மனைவியின் கிட்னியை விற்ற கணவன் - 2வது திருமணம் செய்து உல்லாசம்! | A Husband Who Sold His Wife Kidney And Remarried

அதற்காக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று அவரிடம் கூறவைத்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கே அவருக்கு செய்யப்பட்ட ஆப்ரேஷன் மூலம் அவரது கிட்னியை திருடி விற்றுள்ளார் கணவர்.

2வது திருமணம்

அந்த பணத்தில் தனது காதலியை திருமணம் செய்து அவருடன் பெங்களுருவில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் ரஞ்சிதாவுக்கு கடந்த சில நாட்களாக வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டதில், அவருக்கு ஒரு கிட்னி தான் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு அதிர்ந்த ரஞ்சிதா தனது கணவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது, தான் தான் கிட்னினை விற்று, வேறு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் ரஞ்சிதாவை அவமானமும் படுத்தியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ரஞ்சிதா, தனது கணவர் பிரசாந்த் மீது காவல்துறையில் மோசடி புகார் அளித்தார். அதன்பேரில் கணவர் கைது செய்யப்பட்டார்.