கணவரை கத்தியால் குத்திவிட்டு, 3 குழந்தைகளுடன் மனைவி செய்த காரியம் - அதிர்ச்சி!
பெண் ஒருவர் தனது கணவரை குத்திவிட்டு செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை முயற்சி
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கர்ரோல்டன் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென ஏரி ஒன்றிற்குள் பாய்ந்தது. இதுகுறித்து காவல் துறைக்கு அவசர அறிவிப்பு வந்தது, அதில் பேசிய நபர், தன்னை தனது மனைவி கத்தியால் குத்திவிட்டதாக கூறியுள்ளார்.
இந்த கொலை முயற்சிக்கு பிறகு, கார் ஒன்று ஏரிக்குள் பாய்ந்தது தெரியவந்தது. காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், போலீஸ் விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது கணவரை கத்தியால் குத்தி விட்டு, 8, 9 மற்றும் 12 வயதுடைய 3 குழந்தைகளுடன் சென்று காரை ஏரிக்குள் விட்டுள்ளார் என்பது தெரியவந்தது, பிறகு மீட்பு குழுவினர் அவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதில், ஒரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, மற்ற 2 குழந்தைகளும் குணமடைந்து சீராக உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சமபவத்தில் காயமடைந்த கணவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, போலீசார் கொலை முயற்சி செய்த அந்த பெண்ணை கைது செய்தனர்.
மேலும், இந்த கொலை முயற்சிக்கான காரணத்தை அறிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.