தலைக்கேறிய கோபம்...போலீஸ் அதிகாரி கன்னத்தில் ஓங்கி அறைந்த இளம்பெண் - என்ன நடந்தது!

Viral Video India
By Swetha Jul 12, 2024 04:28 AM GMT
Report

ஆண் உதவி ஆய்வாளரை அறைந்த ஸ்பைஸ்ஜெட் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

அறைந்த இளம்பெண்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றுபவர் அனுராதா ராணி. இவர் அதிகாலையில் மற்ற ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது அவர் முழுப் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் உள்ளே நுழைந்திருக்கிறார்.

தலைக்கேறிய கோபம்...போலீஸ் அதிகாரி கன்னத்தில் ஓங்கி அறைந்த இளம்பெண் - என்ன நடந்தது! | Women Spicejet Employee Slaps Cop At Airport

அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கிரிராஜ் பிரசாத் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், அனுராதாவை அருகிலுள்ள நுழைவாயிலில் விமானக் குழுவினரிடம் ஸ்கிரீனிங் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் அந்த நேரத்தில் பெண் சிஐஎஸ்எஃப் ஊழியர்கள் யாரும் அங்கு இல்லை என சொல்லப்படுகிறது.

இதையடுத்து, பாதுகாப்பு சோதனையை முடிக்க பெண் சக ஊழியர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார். அவர் வருவதற்குள் கிரிராஜ் பிரசாத்துக்கும் அனுராதா ராணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த அனுராதா ராணி,

விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பயணி - அதிரடியாக இறக்கிவிட்ட அதிகாரிகள்

விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பயணி - அதிரடியாக இறக்கிவிட்ட அதிகாரிகள்

என்ன நடந்தது?

அந்த உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்துள்ளார் என ஜெய்ப்பூர் விமான நிலைய நிலைய அதிகாரி ராம் லால் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தலைக்கேறிய கோபம்...போலீஸ் அதிகாரி கன்னத்தில் ஓங்கி அறைந்த இளம்பெண் - என்ன நடந்தது! | Women Spicejet Employee Slaps Cop At Airport

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஸ்பைஸ்ஜெட் ஊழியரான அனுராதா ராணியிடம் சரியான விமான நிலைய நுழைவு அனுமதி இருந்தது. அவர், சிஐஎஸ்எஃப் பணியாளர்களால் தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

இதில் அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், இந்த வழக்கில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் காவல்துறையை அணுகியுள்ளோம். இந்த விஷயத்தில் நாங்கள் எங்கள் ஊழியருக்கு,

உறுதியாக நிற்கிறோம், அவருக்கு முழு ஆதரவையும் வழங்க உறுதிபூண்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.இருப்பினும், ஊழியரின் சேவையை தடுத்ததற்காக அந்தப் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது