விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பயணி - அதிரடியாக இறக்கிவிட்ட அதிகாரிகள்

Delhi
By Thahir Jan 24, 2023 04:28 AM GMT
Report

டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணம் செய்ய இருந்த ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறியதால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.

தகாத முறையில் நடந்து கொண்ட பயணி 

டெல்லியில் இருந்து நேற்று ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று பெங்களூருக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது இருக்கையில், இருந்த பயணி ஒருவர் பணிப்பெண்ணிடம் தகாத முறையில நடந்து கொண்டதாக தெரிகிறது.

Passenger assaults flight attendant

அந்த பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் ஆவேசமாக பேசும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. விமான பாதுகாப்பு அதிகாரிகளிடம் விமான ஊழியர்கள் புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய அந்த பயணியும் அவருடன் இருந்த மற்றொருவரும் விமான பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதன் பின்னரே விமானம் புறப்பட்டுச் சென்றது. விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் விமான ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.