தகாத உறவில் தரித்த குழந்தை.. ஒரே வாரம், ரூ. 3 லட்சத்திற்கு விலைபோன தாய் - அதிர்ச்சி!
பிறந்த குழந்தையை ரூ. 3 லட்சத்திற்கு விற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.n
கள்ளக்காதல்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன், இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துசுடலி (36). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த தம்பதியினர் இடையே உள்ள பிரச்சனை காரணமாக பிரிந்தனர், அப்பொழுது முத்துசுடலிக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அவருடன் இருந்தபோது கர்ப்பமான இவருக்கு ஒரு ஆன் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தையை தனது கள்ளக்காதலன், உறவினர்கள் என யாருக்கும் தெரியாமல் யாருக்காவது விற்றுவிட நினைத்துள்ளார். இதை சேத்தூரை அடுத்த முகவூரை சேர்ந்த ராஜேஸ்வரியிடம் (54) கூறினார்.
தென்காசி மாவட்டம் பெரும்பத்தூரை சேர்ந்த புரோக்கர் ஜெயபால், ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த செல்வி (30) ஆகியோரின் உதவியால் ஈரோட்டை சேர்ந்த தம்பிராஜன் மனைவி அசினாவுக்கு அந்த குழந்தையை விற்றுள்ளனர்.
விசாரணை
இந்நிலையில், முத்துசுடலிக்கு திடீரென உடல்நல குறைபாடு ஏற்பட்டது. இதனால் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் செவிலியர்களும் தாய்ப்பால் கொடுக்காததால் தான் இந்த பிரச்சனை, குழந்தை எங்கே என கேட்டுள்ளனர்.
அதற்கு இவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார், இதில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர் திருப்பதிக்கு தகவல் அளித்தனர். பின்னர் விசாரணையில் குழந்தையை ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு விற்றது உறுதியானது.
மேலும், போலீஸார் விசாரணை நடத்தியதில் குழந்தையை வளர்க்க தனக்கு விருப்பம் இல்லை என்றும் அதை 3.5 லட்சத்திற்கு விற்றதும் அம்பலம் ஆனது. அந்த பணத்தில் 2 லட்சத்தை முத்துசுடலி எடுத்துக் கொண்டதாகவும் மீதமுள்ள ஒன்றரை லட்சத்தை புரோக்கர் உள்ளிட்டோருக்கு கொடுத்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.